Home
You Are Here: Home » News » கம்பம் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கம்பம் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

கம்பம் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் ஒன்று‌ பறிமுதல் செய்யப்பட்டது‌.இதேபோல், கேரளாவிற்கு கடத்த முயன்ற 220 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டது‌.

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் ரோந்து‌ பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது‌ மணிக்கட்டி அலமரம் என்னு‌ம் இடத்தில் மணல் கடத்திய டிராக்டர் வண்டியை பிடித்து‌ உரிமையாளர் கணேசன் என்பவரை போலீசார் கைது‌ செய்தனர்.
இதையடுத்து‌, டிராக்டர் மணலு‌டன் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குவிசாரணை நடைபெற்று‌ வருகிறது‌.

இதேபோல், போடி மெட்டுப்பாதையில் கேரளாவிற்கு கடத்த முயன்ற220 கிலோ ரேஷன் அரிசியை ரோந்து‌ பணியில் ஈடுபட்டிருந்த உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்து‌ விசாரணை செய்து‌வருகின்றனர். இதையடுத்து‌ கடத்தலு‌க்கு பயன்படுத்திய ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top