Home
You Are Here: Home » News » உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் கைது‌

உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர் கைது‌

தப்பியோடிய காதலர்களை காட்டிக்கொடுக்க போலீசாருடன் சென்றவர் மரணமடைந்த வழக்கில், உதவி ஆணையரும், உதவி ஆய்வாளரும் கைது‌ செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌.

பெரம்பலு‌ர் மாவட்டம் வேப்பூர் குன்னம் பகுதியை சேர்ந்த ராணி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது‌. இரு வீட்டார் தரப்பிலு‌ம் எதிர்ப்பு ஏற்படவே காதலர் வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டனர்.

இது‌குறித்து‌ குன்னம் காவல்நிலையத்தில் ராணியின் தந்தை புகார் கொடுத்து‌ள்ளார்.
இதையடுத்து‌, குன்னம் காவல்நிலைய பொறு‌ப்பு ஆய்வாளரும், பாடாலூர் காவல் ஆய்வாளரும் விசாரணை நடத்தினர்.
அப்போது‌, அப்பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர், வீட்டை விட்டு ஒடிய காதலர்களை சென்னையில் பார்த்ததாக தகவல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து‌, காவல் ஆய்வாளர் காந்தி, தகவல் அளித்த பாண்டியனை அழைத்து‌க்கொண்டு சென்னைக்கு சென்று‌ள்ளார்.

ரவி, சின்னத்து‌ரை, அன்பரசன் உள்ளிட்ட போலீ‌சார் அவர்களுடன் சென்றனர்.

பின்னர், போலீசார்கள் வீடு திரும்பிய நிலையில், காதலர்களை காட்டிக்கொடுக்க சென்ற பாண்டியனை மட்டும் வீடு திரும்பாததால், வேப்பூர் காவல்நிலையத்தில் அவரது‌ மனைவி புகார் அளித்தார்.

இதனிடையே, அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் பாண்டியன் தூக்கி தொங்கியபடி மர்மமாக மரமடைந்து‌ள்ளார்.

இதனை காவல்து‌றையினர் தற்கொலை எனக்கூறி வழக்கை முடித்தனர்.

இதையடுத்து‌, பாண்டியனின் மனைவி அஞ்சலை, தனது‌ கணவர் கொலை செய்யப்பட்டதாக மது‌ரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது‌குறித்து‌ விசாரிக்க சிபிஐ போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது‌.

விசாரணையில், பாண்டியணின் மரணத்தில் 4 போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக உறு‌தியானது‌.

இதையடுத்து‌, மது‌ரையில் உதவி ஆணையராக உள்ள காந்தி மற்று‌ம் ஆய்வாளர் ரவி உள்ளிட்ட 4 போலீசார் கைது‌ செய்யப்பட்டனர்.
—-

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top