Home
You Are Here: Home » News » துறையூர் அருகே மாணவியை நரபலி கொடுக்க முயற்சி

துறையூர் அருகே மாணவியை நரபலி கொடுக்க முயற்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புதையலுக்கு ஆசைப்பட்டு 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை தந்தையே நரபலி கொடுக்க முயற்சி செய்யப்பட்ட கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோனேரிபட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது வீட்டில் புதையல் உள்ளதாக பூசாரி ஒருவர் கூறியுள்ளார். இதனை அடுத்து, பூசாரியுடன் இணைந்து வீட்டில் புதையலை தோண்டும் பணியில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பூசாரியுடன் இணைந்து, இரண்டாவது மனைவி ராணி, அவரது தந்தை நல்லுசாமி மற்றும் நண்பர் மணி ஆகியோர் ரவிச்சந்திரனின் முதல் மனைவியின் மகள் பானுப்பிரியாவை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ரவிச்சந்திரன், 12வது படிக்கும் தனது முதல் மனைவியின் மகளை நரபலி கொடுக்க அழைத்து சென்றுள்ளார்.

இதனிடையே, பூசைகள் நடைபெற ஆயத்தமான நிலையில், சூழ்நிலையை உணர்ந்த பானுப்பிரியா அங்கிருந்து தப்பித்து வந்துள்ளார். அருகிலிருந்த ராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதனை அடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த அவர்கள், புதையலுக்கு ஆசைப்பட்டு சிறுமியை நரபலி கொடுக்க துணிந்த ரவிச்சந்திரன் மற்றும் தூண்டுதலாக இருந்த ராணி, நல்லுசாமி மற்றும் மணி ஆகியோரை கைது செய்தனர்.

தலைமறைவான பூசாரியை தீவிரமாக தேடி வருகின்றனர். புதையலுக்கு ஆசைப்பட்டு தந்தையே மகளை நரபலி கொடுக்க துணிந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
——-

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top