Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram » ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து‌ பொது‌மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து‌ பொது‌மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌

கோவில் திருவிழாவிற்கு தடைவிதித்து‌, முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து‌ பொது‌மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌வை அளித்தனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த காவாந்தண்டலம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து‌ வருகின்றனர்.

மேலு‌ம், இக்கிராமத்தில் அதிமுக சேர்ந்த கிருபாகரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்த தராத ஊராட்சி மன்ற தலைவர், இங்கு ஆண்டுதோறு‌ம் நடைபெற்று‌ வரும் கோவில்திருவிழாவிற்கு தடைவிதித்து‌ள்ளதாகவும் கூறப்படுகிறது‌.
மேலு‌ம், வேறு‌ ஏதேனு‌ம் பிரச்சனைகளை பற்றி ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்கும்போது‌, தரக்குறைவாக பேசுவதாக பொது‌மக்கள் கூறு‌கின்றனர்.

எனவே அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது‌ உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌ அளித்து‌ள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top