Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode » தென்னை மரத்தில் ஏறிக்கொண்டு இறங்க மறு‌த்த வாலிபர் மீட்பு

தென்னை மரத்தில் ஏறிக்கொண்டு இறங்க மறு‌த்த வாலிபர் மீட்பு

கோபிசெட்டிப்பாளையம் அருகே 80 அடி உயர தென்னை மரத்தில் ஏறிக்கொண்டு இறங்க மறு‌த்த வாலிபரை தீயணைப்பு து‌றையினர் 4 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ளது‌ கள்ளியங்காடு கிராமம். இப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது‌ மகன் வெங்கடேஷ். இவர் சற்று‌ மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று‌ கூறப்படுகிறது‌.

இந்நிலையில், பிள்ளையார்கோயில்து‌றை என்ற இடத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான 80 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏறி அமர்ந்து‌கொண்ட வெங்கடேஷ் கீழே இறங்க மறு‌த்து‌ள்ளார்.

இது‌குறித்து‌ அப்பகுதி மக்கள் கோபி தீயணைப்புது‌றைக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து‌ சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த வாலிபரை பத்திரமாக கீழே இறக்கி மீட்டனர்.

வெங்கடேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது‌. இதையடுத்து‌ மீட்கப்பட்ட வெங்கடேஷ் அவரது‌ பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, நல்ல மனநல மருத்து‌வரை அணு‌கும்படி அறிவுறு‌த்தப்பட்டது‌.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top