Home
You Are Here: Home » News » லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் போர்மென் கைது

லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் போர்மென் கைது

திருச்சியில் மின் இணைப்பை துண்டிக்க இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் போர்மென் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் வசித்து வருபவர் அப்துல் அஜிஸ். இவர் சுந்தர் நகர் பகுதியில் மீன்கடை நடத்தி வந்தார். பல்வேறு காரணங்களால் அப்பகுதியில் இருந்த‌ மீன் கடையை அவர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்தார்.

இதனிடையே, சுந்தர்நகர் பகுதியில் இருந்த கடையின் மின் இணைப்பை துண்டிக்க கோரி கே.கே நகர் மின்வாரிய அலுவலகத்தில் அப்துல் அஜிஸ் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பம் அளித்து நீண்ட நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பாடததால், மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது, உதவி மின்பொறியாளர் ராஜசேகர் மற்றும் போர்மென் தியாகராஜன் ஆகியோர் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனை அடுத்து, அப்துல் அஜிஸ், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அவர்களின் ஆலோசனையின் பேரில், 2 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக அப்துல் அஜிஸ் அளித்துள்ளார். உதவி மின்பொறியாளர் ராஜசேகர் மற்றும் போர்மென் தியாகராஜன் ஆகியோர் லஞ்சம் பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து இருவரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top