Home
You Are Here: Home » News » உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் 31 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் 31 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 31 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சை பெரியகோவிலில் ஆசியாவிலேயே முதன்முறையாக 31 அதிநவீன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீனகேமராக்கள் மூலம் எடுக்கும் காட்சிகள் அனைத்தும் ரிமோட் மூலம் ஒரே நேரத்தில் டெல்லி, சென்னையில் உள்ள தொல்லியல்துறை அலுவலகம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் இருந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் நேற்று‌ முதல் செயல்படதுவங்கின. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த கேமராக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அளவுக்கு படம்பிடிக்கும் திறன்கொண்டவை என்பதால் சந்தேகப்படும் நபரை பதிவு செய்து விட்டால் 31 கேமராக்களும் அந்த நபரை கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top