Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai » மதுரை அருகே பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து

மதுரை அருகே பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியையொட்டி, தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்றிரவு பெயிண்ட் தயாரிக்கும் மூலப்பொருட்களில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்‌, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top