Home
You Are Here: Home » News » Karnataka » சசிகலா, இளவரசிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

சசிகலா, இளவரசிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை தொடங்க மறுப்பு தெரிவித்து வரும் சசிகலா, இளவரசிக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் இறுதிகட்ட வாதங்களை முடித்துள்ள நிலையில்‌, ஜெயலலிதா தரப்பில் இறுதிவாதம் இன்னும் தொடங்காமல் பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது‌‍.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்‌, வரும் திங்கட்கிழமையிலிருந்து இறுதிவாதத்தை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்‍. அப்போது, தங்களது வழக்கறிஞர் டெல்லி சென்றுள்ளதாக கூறி, இறுதிவாதத்தை தொடங்க சசிகலா மறுப்பு தெரிவித்தார்‍.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மாலை 3 மணிக்குள் இறுதிவாதத்தை தொடங்க உத்தரவிட்டார்‍. மேலும் இறுதி வாதத்தை தொடங்கும் வரை சசிகலா, இளவரசி ஆகியோர் கூண்டை விட்டு வெளியேறவும் நீதிபதி தடை விதித்தார்‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top