Home
You Are Here: Home » News » ஊட்டியில் 3 நாட்களாக நடைபெற்ற மலர்க்கண்காட்சி நிறைவு

ஊட்டியில் 3 நாட்களாக நடைபெற்ற மலர்க்கண்காட்சி நிறைவு

ஊட்டியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மலர்க்கண்காட்சி நேற்று‌டன் நிறைவடைந்தது. ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டுகளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வந்த மலர்க்கண்காட்சி நேற்று‌டன் நிறைவடைந்தது. கண்காட்சியில் மூன்றரை லட்சம் மலர்ச்செடிகளில் பூத்துகுலுங்கிய கண்கவர் மலர்க் கண்காட்சியை ஒரு லட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

கண்காட்சியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 593 பேருக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

மலர்க்கண்காட்சியில் 70 ஆயிரம் மலர்களால் உருவாக்கப்பட்ட மோனோ ரயில், பழங்குடியின மக்களான தோடர் இனமக்களின் குடில், பிளவர்பெட் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழாவையொட்டி நேற்று‌ தொடங்கியுள்ள 53வது மலர் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

கண்காட்சியையொட்டி இன்று‌ இரண்டாவது‌ நாளாக பிரையண்ட் பூங்காவில் ரோஜா, டேலியா, ஆப்பர் உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் மேலான வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

மலர்களால் உருவான யானை, கள்ளழகர், பிரமிட், குதிரை மற்றும் ரோபோ போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top