Home
You Are Here: Home » News » சேலம் அருகே அதிமுக பிரமுகர் மகன் கடத்தல்

சேலம் அருகே அதிமுக பிரமுகர் மகன் கடத்தல்

சேலம் அருகே 2 கோடி ரூபாய் கேட்டு அதிமுக பிரமுகரின் மகனை மர்ம நபர்கள் கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. மகனை மீட்டு தர கோரி மாவட்ட கண்காணிப்பாளர் அலு‌வலகத்தில் பெற்றோர் புகார் தெரிவித்து‌ள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றிய அதிமுக ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் மாதேஷ். இவர் மாவட்ட அதிமுக பேரவை அவை தலைவராகவும் இருந்து‌ வருகிறார்.
இவரது‌ மகன் சங்கர் அவருடைய, பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார்.
அப்போது‌, சங்கருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கொரியர் வந்து‌ள்ளதாகவும், அதை பெற்று‌ செல்ல வருமாறு‌ வந்த தகவலையடுத்து‌ சங்கர் வெளியே சென்றார்.
அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது‌ தந்தை மாதேஷ், சங்கரின் செல்போனு‌க்கு தொடர்பு கொண்டபோது‌ சுவிட் ஆப் என தகவல் வந்ததையடுத்து‌ அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து‌, பல்வேறு‌ இடங்களில் தேடியும் அதிமுக பிரமுகரின் மகன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மதியம் 2 மணி அளவில் மாதேஷ் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது‌.

அதில், மர்ம நபர் ஒருவர் உங்களுடைய மகனை கடத்தியுள்ளதாகவும், உயிரருடன் வேண்டும் என்றால் இரண்டு கோடி ரூபாய் பணத்தை தர வேண்டும் என்று‌ கூறி இணைப்பை து‌ண்டித்து‌ விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக பிரமுகர் மாதேஷ், இது‌குறித்து‌ பூலாம்பட்டி காவல்து‌றையினர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி விசாரித்து‌ வருகிறார்.

இதனிடையே, மாதேஷ் உறவினர்கள் மற்று‌ம் அதிமுக நிர்வாகிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கடத்தப்பட்ட சங்கரை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தனர். இதையடுத்து‌, தனிப்படை அமைக்கப்பட்டு மாநிலம் முழுவது‌ம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

2 கோடி ரூபாய் கேட்டு திரைப்பட பாணியில் அதிமுக பிரமுகரின் 30 வயது‌ மகனை கடத்திய சம்பம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top