Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram » மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து

மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து

மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்..

காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் தான் இந்த விபத்து நடந்தது. உளுத்தம்பருப்பு லோடு ஏற்றி கொண்டு சென்னையில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top