Home
You Are Here: Home » News » திருவலம் அருகே இளைஞர் படுகொலை

திருவலம் அருகே இளைஞர் படுகொலை

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே இளைஞர் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்‍.

காட்பாடி திருவலம் அருகே சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சார்ட்‍. வெல்டராக பணியாற்றி வரும் இவரை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் கடத்தப்பட்ட ரிச்சார்ட் படுகொலை செய்யப்பட்டு பாலாற்றங்கரை அருகே கிடந்ததை அறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காவல்துறையினரின் மெத்தன போக்கை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முற்றுகையில் ஈடுபட்டவர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் வந்து சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்‍. இதனையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்‍. மேலும் இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துது கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்..

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top