Home
You Are Here: Home » News » தூத்துக்குடி அனல் மின் நிலைய 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலைய 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலைய 4-வது யூனிட்டில் பராமரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது…

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டில் இருந்து தினமும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

5 யூனிட்டுகளும் நிறுவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவற்றில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து 5 யூனிட்களையும் பராமரிக்க தமிழக அரசுமுடிவு செய்தது. அதன்படி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 3-வது யூனிட் பராமரிக்கப்பட்டது.

இந்நிலையில் 4-வது யூனிட் பராமரிப்பு பணி நேற்றிரவு தொடங்கியது. இதன் காரணமாக அந்த யூனிட்டில் 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

45 நாட்களுக்கு பராமரிப்பு பணி நடக்கும் என்பதால் அதில் உற்பத்தியாகும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது..

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top