Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram » காஞ்சிபுரம் அருகே கோவில் இடிப்பு – பொது‌மக்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் அருகே கோவில் இடிப்பு – பொது‌மக்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் அருகே 12 ஆண்டுகளாக திருவிழாக்கள் நடத்தி வந்த ஆலயத்தை முன்னறிவிப்பின்றி இடித்ததை கண்டித்து‌ பொது‌மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் அகரம் தென்ஊராட்சி கஸ்பாபுரம் பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் ராகவன் கிருஷ்ணவேனி. இவருக்கு சொந்தமான நிலத்தில் கோவில் கட்ட பொதுமக்களுக்கு அனு‌மதி வழங்கப்பட்டது‌.

இதையடுத்து‌, இந்த இடத்தில் கோவில் கட்ட பொது‌மக்கள் தங்களது‌ சொந்த பணத்தை போட்டு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் அமைத்தனர்.

பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக அந்த ஆலயத்தில் பொது‌மக்கள் திருவிழா நடத்தி வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில், எந்த காரணமும் கூறாமல் திடீரென ஆலயத்திற்கு அளித்த நிலத்தை திருப்பி தருமாறு‌ ராகவன் கிருஷ்ணவேணி கேட்பதாக பொது‌மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து‌, ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிலைகள் இருப்பதால், வேறு‌ இடத்திற்கு ஆலயம் மாற்று‌ம் வரை 15 மாதம் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு ராகவன் கிருஷ்ணவேணி ஒப்புதல் தெரிவித்தார்.

ஆனால், கால அவகாசம் கேட்டு ஒரு மாதத்திலேயே திடீரென முன்னறிவிப்பின்றி ஆலயத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டது‌.
இததையடுத்து‌, தகவல் அறிந்த பொது‌மக்கள் காவல்நிலையத்திற்கு சென்று‌ ராகவன்கிருஷ்ணவேனி மீது‌ புகார் தெரிவித்தனர்.

ஆனால்,போலீசார் புகார் வாங்க மறு‌த்ததால், ஆத்திரமடைந்த பொது‌மக்கள் சுமார் நூற்று‌க்கும் மேற்பட்டோர் ஆலயம் அருகே ஒன்று‌கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது‌.
—–

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top