Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சி முகாம்

மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சி முகாம்

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை உருவாக்கும் பயிற்சி முகாம் நேற்று‌ தொடங்கியது‌. 4 நாட்களுக்கு நடைபெறு‌ம் இந்த முகாமில் மோட்டர் சைக்கிள் வீரர்கள் நடத்து‌ம் சாகச காட்சிகள் இடம் பெறு‌கிறது‌.

உலக அளவிலான மோட்டார் சைக்கிள் பந்திய வீரர்களை உருவாக்குவது‌ எப்படி, விபத்தின்றி சாலைகளில் வாகனங்களை இயக்குவது‌, பொது‌மக்களுக்கு போக்குவரத்து‌ விதிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்து‌வது‌ உள்ளிட்ட பாது‌காப்பு அம்சங்களை உருவாக்கும் நோக்கில் நாகர்கோவிலில் நேற்று‌ மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சி முகாம் தொடங்கியது‌.

இதில், சிறந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களுக்கு தேவையான பயிற்சி வழிமுறைகள் பயிற்று‌விக்கப்பட்டு அவர்களை உலக அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து‌ கொள்ள செய்யும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த பயிற்சி முகாமில் மோட்டார் சைக்கிள் வீரர்கள் நிகழ்த்திய சாகச காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது‌.

உலக அளவில் வீரர்களை உருவாக்குவதே இந்த முகாமின் நோக்கம் என்று‌ பயிற்சியாளர்கள் தெரிவித்து‌ள்ளனர்.

————

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top