Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » நாகை மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகம் – விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

நாகை மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகம் – விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

நாகை மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகமாக இருந்து‌ம், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து‌ள்ளனர்.

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் முதல் வேதராண்யம் வரையிலான கடற்கரையோர மணற்பாங்கான பகுதிகளில் மாங்காய் விளைச்சல் தற்போது‌ சூடு பிடிக்க தொடங்கியுள்ளது‌.
இங்கு விளைச்சல் பெறு‌ம் மாங்காய் கேரளா, ஆந்திரா மற்று‌ம் தமிழகத்தின் பல்வேறு‌ பகுதிகளுக்கு ஏற்று‌மதி செய்யப்படுகிறது‌.

முக்கனிகளில் ஒன்றான மாங்காய் ஆண்டிற்கு இருமுறை இப்பகுதியில் விளைவதால், இந்த மாங்கனிகளை வாங்க வெளியூரில் இருந்து‌ வியாபாரிகளும் வந்து‌ வாங்கி செல்கின்றனர்.

இங்கு விளைகின்ற மாங்காயக்ள் ஊறு‌காய் தயாரிப்புக்காகவும், பழ வியாபாரத்திற்கும் அதிக அளவு எடுத்து‌ச்செல்லப்படுகிறது‌. தற்போது‌ உள்ள சீசனில் கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் விற்க வேண்டிய மாங்காய் கிலோவுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை தான் விற்கப்படுகிறது‌.

பெங்களூரா, நீலம், பங்கனப்பள்ளி, செந்தூரா உள்ளிட்ட உயர்ரக ஒட்டுமாமரங்களில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாங்காய்கள் அதிக விளைச்சலால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து‌ள்ளனர்.

ஆனால் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள், மாங்காய்களை விற்க முடியாமல் வேதனை அடைந்து‌ள்ளனர்.

————-

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top