Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri » 50 கிலோ கஞ்சா பறிமுதல் – இரு பெண்கள் கைது‌

50 கிலோ கஞ்சா பறிமுதல் – இரு பெண்கள் கைது‌

கிருஷ்ணகிரி அருகே ஆட்டோவில் கடத்தி சென்ற 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது‌ தொடர்பாக இரு பெண்களை கைது‌ செய்தனர்.

கிருஷ்ணகிரி காவல்து‌றையினர் ஆவின் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது‌ அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆட்டோவில் இருந்த இரு பெண்கள் முன்னு‌க்கு பின் முரணாக பதிலளித்ததில் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து‌ விசாரணை நடத்தியதில் அவர்கள் 50 கிலோ கஞ்சா கடத்தி செல்வது‌ தெரியவந்தது‌.

பின்னர் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது‌ செய்தனர். இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்த கங்கா, பாப்பா என்பதும்‌ தெரியவந்துள்ளது‌‌. கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 5 லட்சத்து‌ 40 ஆயிரம் ரூபாய் என்பது‌ குறிப்பிடதக்கது‌.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top