Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode » கோபி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கோபி அருகே காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

கோபி அருகே சீரான குடிநீர் கேட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோபி செட்டிபாளையம் அருகே தாழ்குனி ஊராட்சிக்குட்பட்ட அக்கரைபாளையம், குரைகல்பாளையம், காட்டுப்பாளையம், புளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 6 மாத காலமாக சீராக குடிநீர் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து‌ள்ளது‌.

இந்நிலையில், கடந்த 20 நாள்களாக பஞ்சாயத்து‌ நிர்வாகத்தினர் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்று‌ம் ஆண்கள் காலிகுடங்களுடன் நம்பியூர் மற்று‌ம் கொளூப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்,

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்து‌றையினர் பொது‌மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இரண்டு தினங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று‌ உறு‌தியளித்ததையடுத்து‌ போராட்டம் கைவிடப்பட்டது‌.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top