Home
You Are Here: Home » News » திருவண்ணாமலையில் வியாபாரி படுகொலை உறவினர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் வியாபாரி படுகொலை உறவினர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் கடை முன்பு மது அருந்தியதை தட்டி கேட்ட வியாபாரியை, படுகொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார்.

கடந்த 17-ந் தேதி இரவு, அப்பகுதியை சேர்ந்த 5 பேர் செல்வராஜ் கடையின் முன்பு மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை செல்வராஜ் தட்டி கேட்ட போது, 5 பேரும் செல்வராஜை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்‍. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். இதனையடுத்து கொலையாளிகளை காவல் துறையினர் கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்‍.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர்‌, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ‌கொலையாளிகள் 5 பேரும் விரைவில் கைது ‌செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top