Home
You Are Here: Home » News » திருத்தணி அருகே குறுகிய சந்தில் சிக்கிய சிறுவன் – போராடி மீட்பு

திருத்தணி அருகே குறுகிய சந்தில் சிக்கிய சிறுவன் – போராடி மீட்பு

திருத்தணி அருகே குறுகிய சந்தில் சிக்கிய சிறுவனை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள கே.பி.எம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாலா. இவன் வீட்டின் அருகே பந்து விளையாடி கொண்டிருந்துள்ளான்.

அப்போது, அங்கிருந்த இரு வீடுகளுக்கு இடைப்பட்ட 1 அடி அகலமான சந்தில் பந்து சென்று விழுந்துள்ளது. இந்நிலையில், பந்தை எடுக்க முயற்சி செய்துள்ள சிறுவன், குறுகிய சந்தில் சிக்கிக் கொண்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மயக்க நிலையில் உயிருக்கு போராடிய சிறுவனை மீட்க போராடினர். சுமார் ஒருமணிநேர மீட்பு பணிகளுக்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

இதனை அடுத்து, அம்மையார்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பந்தை எடுக்க சென்று குறுகிய சந்தில் சிறுவன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top