Home
You Are Here: Home » News » கேபிள் டிவி அலுவலகத்தில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் போராட்டம்

கேபிள் டிவி அலுவலகத்தில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் போராட்டம்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதுடன், மாமுல் கேட்டு அதிமுகவினர் கட்டாயபடுத்து‌வதாக கூறி, திருப்பூர் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட கேபிள்டிவி ஒளிபரப்பு மையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட உள்ளூர் தொலைகாட்சிகள் செயல்பட்டு வருகிறது.

இம்மையம் பெரும்பாலும் அதிமுகவினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, டெண்டர் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் தொலைகாட்சிகளுக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் அளிக்க மறுத்தால் ஒளிபரப்புக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறை பொருப்பாளராக உள்ள அதிமுக பிரமுகரான பாலு என்பவர் கட்டாயமாக மிரட்டி லஞ்சம் பெறுவதாக கூறி, உள்ளூர் தொலைகாட்சி உரிமையாளர்கள் திருப்பூர் அரசு கேபிள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுக்கு லஞ்சம் அளிக்க வேண்டி உள்ளதால் லஞ்சத்தொகையை அதிகரித்து கேட்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் தொலைகாட்சி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top