Home
You Are Here: Home » News » தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக இன்று‌ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சாத்தூரில் 7 சென்டிமீட்டரும்‌, சூளைகிரியில் 6 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக ரமணன் தெரிவித்தார்‍.

இதனிடையே, நேற்று‌ மாலை காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சூறைகாற்று‌டன் கூடிய மழை பெய்து‌ள்ளது‌. இதனால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து‌ம், கிளைகள் முறிந்து‌ம் , சாலைகளில் விழுந்தன.

வெப்ப சலனம் காரணமாக இன்று‌ம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது அந்தமான் மற்று‌ம் மியான்மர் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்த அவர்‌, இது மேலும் வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்‍. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்‍.

இதனிடையே, தமிழகத்தில் இந்த வருடம் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூரில் கனமழை பெய்து வருவது அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர் மழையால் வேலூரில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது..

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று‌ மாலை பலத்தகாற்று‌டன் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சில இடங்களில் மரங்களின் கிளைகள் உடைந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் வெய்யில் கொளுத்தி வரும் நிலையில், பெய்துள்ள கனமழை பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top