Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4லட்சத்து 30ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

அரியலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளை நடந்து வந்தது. இதில் எந்த தடையங்களும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அரியலூர் அருகே உள்ள செந்துரை புறவழிச்சாலையில் காவல்துறையினர் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் வேகமாக செல்ல முயன்றனர்.

இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த இருவரையும் துரத்திப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் அரியலூரை அடுத்த பள்ளக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணன், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பாலு என்பதும், இருவரும் அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 7 இடங்களில் நடந்த வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top