Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam » வேதாரண்யம் அருகே நக்கடலில் ‌சென்று கொண்டிருந்த விசைப்படகு பழுதாகி கரை ஒதுங்கியது

வேதாரண்யம் அருகே நக்கடலில் ‌சென்று கொண்டிருந்த விசைப்படகு பழுதாகி கரை ஒதுங்கியது

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே நக்கடலில் ‌சென்று கொண்டிருந்த விசைப்படகு ஒன்று திடீரென பழுதாகி கரை ஒதுங்கியது. அதில் இருந்த சென்னை மீனவர்கள் 4பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவர், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பட்டம் என்பவரிடம் விசைப்படகை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விசைப்படகை அசோக், அகஸ்டீன், நாகூரான், ராமன் ஆகிய மீனவர்கள் கடல் மார்க்கமாக சென்னைக்கு ஓட்டிவந்துகொண்டிருந்தனர்.

அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரை பகுதியில் விசைப்படகு வந்த போது, எதிர்பாராத விதமாக என்ஜின் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பழுதாகி நின்ற விசைப்படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியதாகவும், அப்பகுதியில் காற்று பலமாக வீசியதால், நங்கூரத்தை அறுத்து கொண்டு, விசைப்படகு கரைக்கு இழுத்து செல்லப்பட்டு தரைதட்டி நின்றதாகவும் கூறப்படுகிறது. இதில் விசைப்படகில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தகவல் அறிந்த, கடலோர காவல் படையினர் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்கள் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top