Home
You Are Here: Home » News » சிங்கம்புணரி அருகே மாடு வளர்ப்போர் காளைகளுடன் கண்டன ஊர்வலம்

சிங்கம்புணரி அருகே மாடு வளர்ப்போர் காளைகளுடன் கண்டன ஊர்வலம்

உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுக்கு விதித்து்ளள தடையை நீக்கக்கோரி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாடு வளர்ப்போர் காளைகளுடன் கண்டன ஊர்வலம் நடத்தினர். கடையடைப்பு போராட்டமும், நடைபெற்றது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போன்றைவைகளை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து மதுரை மற்றும் கம்பம், தேனி உள்பட பல மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் உள்ள மாடுவளர்ப்போர் தங்கள் காளகளை அடிமாட்டு இறைச்சிக்காக கேரளாவுக்கு அனுப்பிவரும் அவல நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த காளப்பூர் கிராம மக்கள் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்த தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த தடையை நீக்கக்கோரியும் வடக்கு வாசல் செல்வியம்மன் கோவி்ல் முன்பு நேற்று காளை மாடுகளுடன் கூடினர். பின்னர் காளைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

கிராமம் முழுவதும் கறு்ப்புக்கொடி ஏற்றப்பட்டு, அனைத்துக் கடைகளும் அடைக்கபட்டிருந்தன.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top