Home
You Are Here: Home » News » இடிந்தகரையில் பதற்றம்

இடிந்தகரையில் பதற்றம்

இடிந்தகரையில் நேற்றிரவு சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒரு கார் மற்றும் 3 வீடுகள் சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய ஒத்துழைப்புடன் அணு உலைகள் நிறுவபட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் முதல் உலையில் மின்உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக அணுஉலை எதிர்ப்பாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சிலகாலமாக இந்த போராட்டம் ஓய்ந்திருந்தது. இந்நிலையில், நேற்றிரவு இடிந்தகரை பகுதியில் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒரு கார் மற்றும் 3 வீடுகள் சேதமடைந்தன.

இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top