Home
You Are Here: Home » News » பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 8 லட்சம் மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுதினர். இத்தேர்விற்கான முடிவுகளை நாளை காலை 10 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடுகிறது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in உள்ளிட்ட இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வு எழுதியவர்களுக்கு முடிவுகள் வெளியான அன்றே மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதால்‌, அவர்களது தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வுகள் வரும் ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top