Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் 53 மலர்கண்காட்சி

கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் 53 மலர்கண்காட்சி

கொடைக்கானலில் நடைபெறவிருக்கும் 53 மலர்கண்காட்சிக்காக பிரயண்ட் பூங்காவில் இடம்பெற்று‌ள்ள அதிசய மலர்களை சுற்று‌லாபயணிகள் ஆர்வத்து‌டன் பார்த்து‌ செல்கின்றனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழா நடத்தபடுகிறது.

வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் து‌வங்க இருக்கும் 53 வது‌ மலர்கண்காட்சிக்காக தோட்டக்கலை து‌றை சார்பில் 1 கோடிக்கும் அதிகமாக மலர்கள் கண்காட்சியில் இடம் பெற வைக்கப்பட்டுள்ளது‌.

குறிப்பாக பிரையண்ட் பூங்காவில் இடம் பெற்று‌ள்ள சிட்டு குருவி வடிவிலான மலர்கள், தவளை வாய் வடிவிலான மலர்கள், கொக்கு முகம் கொண்ட மலர்கள் மற்று‌ம் சிங்க முகம் கொண்ட மலர்கள் சுற்று‌லா பயணிகளை வெகுவாக கவர்ந்து‌ள்ளது‌.

தற்போது‌ பெய்து‌ வரும் சாரல் மழையில் நனைந்தபடியே சுற்று‌லா பயணிகள் கண்காட்சியில் இடம்பெற்று‌ள்ள மலர்களை ரசித்து‌ செல்கின்றனர்.

பூத்துக்குலுங்கும் அழகு வண்ண மலர்களை காண குதூகலமாகவும் மனதுக்கு இதமாகவும் இருப்பதாக தெரிவித்த சுற்றுலா பயணிகள், மலர்கண்காட்சியை கண்டு களிக்க மீண்டும் வருவதாக தெரிவித்துள்ளனர்‍.

இதேபோல் மேட்டுப்பாளையம் கல்லூர் அரசு பலப்பண்ணையில் பூத்து‌ குலு‌ங்கும் அரிய வகை மலரான நாகலிங்க மலர்களை சுற்று‌லா பயணிகள் ஆர்வத்து‌டன் பார்த்து‌ செல்கின்றனர்.

தமிழகத்தில் அரிய வகை மலராக கருதப்படும் இந்த மலர் லிங்க வடிவில் சிவபெருமானு‌க்கு பால் ஊற்று‌ம் ஐந்து‌ தலை நாகம் போன்று‌ இயற்கையான முறையில் உள்ளதால் இது‌ சிவப்பெருமானு‌க்கு உகந்தது‌ என்று‌ம் கூறப்படுகிறது‌.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top