Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri » விபத்து ஏற்படுத்திய லாரி மீது கல்வீசி தாக்குதல்

விபத்து ஏற்படுத்திய லாரி மீது கல்வீசி தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டிப்பர் லாரி மோதி இருசக்கரவாகனத்தில் சென்ற பெண் பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், டிப்பர் லாரிகள் மீது கல்வீசித் தாக்கினர்.

ஓசூர் அருகே மோரனப்பள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி அனுராதா. கணவன், மனைவி இருவரும் நேற்று மாலை ஓசூர் பெங்களூர் சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அனுராதா லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ராமகிருஷ்ணனும் பலத்த காயம் அடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

விபத்து பற்றிய தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரிகள் மீது கல்வீசி தாக்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த கல்வீச்சு தொடர்பாக காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top