Home
You Are Here: Home » News » பேருந்து நடத்துனரை தீ வைத்து கொலை செய்ய முயற்சி

பேருந்து நடத்துனரை தீ வைத்து கொலை செய்ய முயற்சி

குடிபோதையில் தனியார் பேருந்தில் ஏறியவர்களை நடுவழியில் இறக்கிவிட்ட அதன் நடத்துனர் தீவைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து நெல்லைக்குச் சென்ற தனியார் பேருந்தில் கங்கைகொண்டானைச் சேர்ந்த அப்பாதுரை,பெத்தபெருமாள் ஆகியோர் குடிபோதையில் ஏறியுள்ளனர்‍. படியில் நின்று பயணம் செய்த அவர்களை பேருந்தின் உள்ளே செல்லும்படி நடத்துநர் செல்வன் கூறியுள்ளார்‍.

ஆனால் அதற்கு அவர்கள் மறுப்புத்தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் செல்வன் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்‍. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த செல்வன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்

நடத்துநர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய அப்பாதுரை மற்றும் பெத்தபெருமாளை அங்கிருந்த பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்‍. தீயில் காயமடைந்த செல்வன்‌,பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளளார்‍.

இதனிடையே தாராபுரம் அருகே தூங்கி கொண்டிருந்த வாலிபரை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் இந்த படுபாதக செயலில் தந்தை ஈடுபட்டதாக தெரிகிறது. தாராபுரம் முல்லை நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top