Home
You Are Here: Home » News » வேலூர் அருகே லாரி ஓட்டுனர் கொடூரமான முறையில் கொலை

வேலூர் அருகே லாரி ஓட்டுனர் கொடூரமான முறையில் கொலை

வேலூர் தங்ககோவில் அருகே குடிநீர் சப்ளை செய்யும் லாரி ஓட்டுனர் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே திருமலைகோடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். குடிநீர் லாரி ஓட்டுனரான இவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் மதுபானம் வாங்கிச்சென்று பேருந்து நிலையம் அருகே மது அருந்திக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது அங்கு மணிவண்ணன் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலைக்கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

லாரி ஓட்டுனர் மணிவண்ணன் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா என விசாரணை நடந்து வருகிறது.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top