Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai » சிங்கப்பூரில் விஷவாயு தாக்கி தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் மரணம்

சிங்கப்பூரில் விஷவாயு தாக்கி தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் மரணம்

சிங்கப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த வாலிபரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்‍.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்‍. இவரது மகன் அழகுராஜா, சிங்கப்பூரில் உள்ள தனியார் கப்பலில் வேலை பார்த்து வந்தார்‍. இந்நிலையில் கப்பலின் அடிப்பகுதியில் வேலை செய்யும் போது, விஷவாயு தாக்கி அழகுராஜா உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்‍. சிங்கப்பூரில் உயிரிழந்த அழகுராஜாவின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்‍.

உயிரிழந்த அழகுராஜவின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்‍.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top