Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode » கஞ்சாவுடன் நின்றிருந்த நைஜீரிய நாட்டு இளைஞர் கைது

கஞ்சாவுடன் நின்றிருந்த நைஜீரிய நாட்டு இளைஞர் கைது

ஈரோடு ரயில்நிலையத்தில் கஞ்சாவுடன் நின்றிருந்த நைஜீரிய நாட்டு இளைஞரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டபோது முதலாவது நடைமேடையில் கையில் பையுடன் நின்றிருந்த நைஜீரிய இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவரிடம் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 9 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கைதான நைஜீரிய இளைஞர் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் மற்றும் பின்னலாடைகளை மும்பைக்கு அனுப்பி விற்பனை செய்து வந்துள்ளார். துணிகளை விற்பனைக்கு கொண்டு செல்லு்ம்போது கஞ்சாவையும் மும்பைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top