Home
You Are Here: Home » News » திருப்பூர் அருகே அரசு கூட்டுறவு வங்கியில் 12 லட்சம் ரூபாய் மோசடி

திருப்பூர் அருகே அரசு கூட்டுறவு வங்கியில் 12 லட்சம் ரூபாய் மோசடி

திருப்பூர் அருகே அரசு கூட்டுறவு வங்கியில் 12 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது தொடர்பாக மாவட்டக் காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி தொடக்கவேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக அதிமுகவை சேர்ந்த கே.ஆர்.சி்ன்னச்சாமி. செயலாளராக சோமசுந்தரம் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், சங்க செயலாளர் சோமசுந்தரம் நகைக்கடன் பெற்றவர்களின் கணக்கில் கூடுதலான தொகையை கடனாக வழங்கியதாக பதிவு செய்து . அந்த தொகையை எடுத்து முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கவரிங் நகைகள் மீதும் நகைக்ககடன்கள் வழங்கியதோடு, போலியான வட்டியில்லா பயிர்க்கடன் என்ற பெயரிலும் கடன் வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதில் கடன்பெற்று பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அந்த மனுவில் வங்கி செயலாளர் சோமசுந்தரம் கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் காணாமல் போய்விட்டதாகவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழ்ங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்தவர் முத்தையா. இவர் தாய் திட்டத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் கணேசனிடம் சென்று கேட்டுள்ளார். இதற்கு கணேசன் தனக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துதருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து முத்தையா கணேசன் கேட்டபடி 20 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 7ம் தேதி முத்தையா கொடுத்துள்ளார். ஆனால் 10 மாதங்களுக்கு மேலாகியும், கணேசன் முத்தையாவுக்கு ஒப்பந்தம் செய்து தராமல் காலம்தாழ்த்தியுள்ளார்.

இதில் ஏமாற்றமடைந்த முத்தையா கணேசனி்டம் தான் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கணேசன் பணத்தை திருப்பித்தராமல் முத்தையாவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பணத்தை இழந்த முத்தையா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஏமாற்றமடைந்த முத்தையா இந்த மோசடி தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் புகார் அளித்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்,.

ஆளுங்கட்சியின் ஒன்றியக்குழு தலைவர் தாய்திட்டத்தில் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top