Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்த சிறுவனின் காலை துண்டித்த முதலை

சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்த சிறுவனின் காலை துண்டித்த முதலை

சிதம்பரம் அருகே ஆற்றில் குளித்தபோது, சிறுவனின் காலை முதலை துண்டித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஹரீஷ். 7ம் வகு்ப்பு படித்து வரும் சிறுவன் ஹரீஸ் தற்போது விடுமுறை என்பதால் வீடு அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். அப்போது அவரை முதலை ஒன்று அவரது வலது காலை கடித்து துண்டாக்கியது. இதைத் தொடர்ந்து ஹரீஸ்க்கு அண்ணாமலை நகர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிதம்பரம் ஆற்றில் முதலை இருப்பதாகவும் இதனால் அடிக்கடி உயிரிழப்பு அபாயம் இருந்து வருவதால் முதலைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top