Home
You Are Here: Home » News » ஆம்பூரில் இடி தாக்கி இரு தொழிலாளர்கள் பலி

ஆம்பூரில் இடி தாக்கி இரு தொழிலாளர்கள் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இடியுடன் கூடிய மழை பெய்தது. மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நின்ற இரு தொழிலார்கள் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி மலைகிராமத்தை சேர்ந்தவர்க்ள குமார், ராமமூர்த்தி. கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரம் நேற்று மாலை ஆம்பூரில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பி்க்கொண்டிருந்தனர், அப்போது மலைப்பகுதி வழியாக சென்றபோது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் அவர்க்ள இருவரும் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிநின்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் அவர்கள் நின்ற மரத்தின்மீது இடிமின்னல் தாக்கியது. இதில் நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இடிதாக்கி பலியானவர்கள் பற்றி காவல்துறைக்கு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர், பின்னர் உடல்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன,.

இதனிடையே பனங்காட்டேரி என்ற பகுதியில். விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த மல்லிகா என்ற பெண் மின்னல் தாக்கியதில் பலத்த காயம்அடைந்தார். அவரை இப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இடிதாக்கி இரு தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூரில் நேற்று திடீரென்று சூறைக்காற்றுடன் இடி மின்னல் ஏற்பட்டது.

அப்போது மேய்ச்சலுக்கு வந்த ஆடுகள் அங்குள்ள பனைமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றன. இதில் திடீரென்று அங்கு மின்னல் தாக்கியதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஆடு மேய்த்த இந்திராணி என்ற பெண் 15 அடி தூரம் தூக்கி வீசப்படடார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top