Home
You Are Here: Home » News » காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து,‌ 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது‌ அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது‌.

வேலூர் மாவட்டம் காட்பாடி மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் விடுமுறை தினத்தையொட்டி தனது‌ சொந்த ஊருக்கு சென்று‌ள்ளார்.

இந்நிலையில், இன்று‌ காலை வீடுதிரும்பிய இவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது ‌குறித்து‌ யோகநாதன் காவல்நிலையத்தில் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று‌ பார்த்தபோது‌ பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது‌ தெரியவந்தது‌.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top