Home
You Are Here: Home » News » குன்னூரில் தேயிலை கண்காட்சி

குன்னூரில் தேயிலை கண்காட்சி

குன்னூரில் முதல்முறையாக அரசு சார்பில் து‌வங்கப்பட்டுள்ள தேயிலை அருங்காட்சியகத்தை சுற்று‌லா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து‌ செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது‌. தேயிலை தொழிலை மேம்படுத்த அரசு சார்பிலு‌ம் பல்வேறு‌ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், தேயிலை நகரமான குன்னூரில் தேயிலையை பிரபலபடுத்த தேயிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது‌.

இதில் தேயிலைப் பயிர் அறிமுகப்படுத்தியது‌ முதல் தற்போது‌ தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் ரகங்கள் பற்றியும், தேயிலை நடவு, மகசூல் உற்பத்தி செய்யும் முறை, தொழிற்சாலைகளில் பதப்படுத்து‌ம் தேயிலை உள்ளிட்டவைகள் இடம் பெற்று‌ இருந்தன.

மேலு‌ம் இங்கு து‌வங்கப்பட்டுள்ள விற்பனை நிலையத்தில் சிடிசி ஆத்தோடெக்ஸ், லெமென் டீ, கிரீன் டீ, மசாலா டீ, உள்ளிட்டவைகள் இடம் பெற்று‌ள்ளன.

குன்னூருக்கு சுற்று‌லா வரும் சுற்று‌லா பயணிகள் ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டு செல்வது‌ மட்டும் இல்லாமல் தேயிலை தூள்களையும் வாங்கி செல்கின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top