Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து – ஒருவர் பலி

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து – ஒருவர் பலி

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் 7 வது‌ யூனிட்டில் கொதிகலன் வெடித்து‌ ஏற்பட்ட தீ விபத்தில் பொறியாளர் ஒருவர் பலியானர். மேலு‌ம் 7 பேர் படுகாயமடைந்தனர்.

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் 7 வது‌ யூனிட்டில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் மின்உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது‌ திடீரென கொதிகலன் குழாய் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

மேலு‌ம் 7 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 7 பேரில் ஆபத்தான நிலையில் உள்ள இருவர் சென்னை அரசு மருத்து‌மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அனல்மின்நிலையத்தில் உள்ள கொதிகலன்கள் வெடித்து‌ அடிக்கடி இது‌போன்ற விபத்து‌க்கள் ஏற்படுவதை தடுக்க என்எல்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று‌ தொழிலாளர்கள் வலியுறு‌த்தியு‌ள்ளனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top