Home
You Are Here: Home » News » கோவில்பட்டி அருகே விபத்து – தந்தை,மகன் பலி

கோவில்பட்டி அருகே விபத்து – தந்தை,மகன் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காரும் இருசக்கரவாகனமும் மோதிக்கொண்டதில், தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டியை சேர்ந்தவர் சுந்தரம் சமையல் மாஸ்டராக வேலை பார்த்துவந்தார். இவரதுமகன் சுரேஷ். 7ம் வகுப்பு படித்துவந்தார். சுந்தரம் தனது மகனுடன் நேற்று கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது வாகனம் சாலைப்புதூர் விலக்கு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த காரும், இருசக்கர வாகனமு்ம் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சுந்தரமும், அவரது மகன் சுரேஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல்அறிந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான சுந்தரம் குடிபோதையில் இருசக்கரவாகனத்தை ஓட்டியதால் விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top