Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » சிலம்பக் கலை வளர்க்கும் விதமாக கோடைக்கால பயிற்சி முகாம்

சிலம்பக் கலை வளர்க்கும் விதமாக கோடைக்கால பயிற்சி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிலம்பக் கலையை வளர்க்கும் விதமாக மாணவ மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்பக்கலையை வளர்க்கும் விதமாகவும், தற்காப்பு கலையை கற்றுக்கொடுப்பதற்காகவும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் சிறப்பு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான சிலம்பப்போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுகின்றனர்.

சிலம்பக்கலையை வளர்ப்பதற்காக அரசு எந்தவித நடவடி்ககையும் எடுக்கவில்லை என்றும், இந்த கலையை வளர்ப்பதற்காக மாவட்ட வாரியாக அரசு விளையாட்டுப் பள்ளிகளில் சிலம்ப பயிற்சியாளர்களை நியமிக்கவேண்டும் என பயிற்சியாளர்கள் அரசுக்கு கோரி்ககை விடுத்துள்ளனர்.

திருவாரூ்ர் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் மற்றும் மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் 6ம்வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாம் நிறைவடைந்தது. பயிற்சி முகாமில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 100மீ்ட்டர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல் ஆகியவை உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

நிறைவுவிழாவில் தேர்வு பெற்ற மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் சான்றிதழ்களை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமலைக்குமார் வழங்கினார்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top