Home
You Are Here: Home » News » சிவகாசியில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

சிவகாசியில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

சிவகாசியில் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் அட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது.

சிவகாசியில் பாதமுத்து என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, குடோனிலிருந்து புகை வெளியேறியது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பலான பேப்பர் அட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதேபோல் பூந்தமல்லி அருகே உள்ள செட்டிபேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான அட்டை குடோனில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்..

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டை பெட்டிகள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top