Home
You Are Here: Home » News » மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சாத்தியமில்லை

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க சாத்தியமில்லை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளதால் குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து ஜீன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது‌.

நடப்பாண்டு குறுவை சம்பா சாகுபடியை செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால் 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூரின் தற்போதைய நீர்மட்டம் வெறும் 36 அடியாக உள்ளது. அணையில் குறைந்தது 80 அடி இருந்ததால் தான் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இன்னும் 15 நாட்களுக்குள் தற்போதைய நிலையிலிருந்து மேலும் 50 அடியாவது நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து அரசு ஆலோசனை நடத்தும் என்று கூறப்படுகிறது.

தற்போது காவிரியிலிருந்து நீர் வருவதற்கான சாத்திய கூறுகள் எதுவும் தென்படாததால், ஜீன் 12-ம் தேதி அணையை திறக்க சாத்தியம் இல்லை என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தாண்டு குறுவை சாகுபடியை கைவிடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்து‌ 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

எனவே, டெல்டாவை காப்பாற்றும் நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top