Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » கொடைக்கானல் சுற்றுலாதலத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 28பேர் கைது

கொடைக்கானல் சுற்றுலாதலத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 28பேர் கைது

கொடைக்கானல் சுற்றுலாதலத்தில் மதுவிருந்துடன் ஆபாச நடனமாடியது தொடர்பாக லாட்ஜ் அதிபர் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்பட 28பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சுற்றுலாதலத்தில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இவ்வாறு இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும், கல்லூரி மாணவிகளையும் ஈர்க்கும் வண்ணம் பூம்பாறை அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் ஆபாச நடனம், மதுவிருந்து, ஆபாச பாடல்களை போட்டு குத்தாட்டம் போன்றவை நடைபெறுவதாக லாட்ஜ் அதிபர் விளம்பரம் செய்துள்ளார்.

இந்த அறிந்த மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கொடைக்கானலில் உள்ள அந்ம லாட்ஜிக்கு சென்று அங்கு நடைபெற்ற மதுவிருந்து மற்றும் ஆபாச நடனத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு இந்த ஆபாச நடனம் பற்றிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் ஆபாச நடனம் நடைபெற்ற லாட்ஜில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அந்த லாட்ஜில் ஆபாச நடனமாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 3பேர் உள்பட 28பேரை போலீசார் கைது செய்தனர். மற்றும் அந்த லாட்ஜில் இருந்த 2 சொகுசு கார்கள் உள்பட 7வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top