Home
You Are Here: Home » News » குன்னூரில் நடைபெற்ற 56 வது பழக்கண்காட்சி

குன்னூரில் நடைபெற்ற 56 வது பழக்கண்காட்சி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற 56 வது பழக்கண்காட்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்

மலை மாவட்டமான நீலகிரியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் 56 வது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில் மதுரை,தர்மபுரி,திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு பழங்களால் வடிவமைக்கப்பட்ட மீனாட்சியம்மன்‌,டால்பின்‌,டெட்டிபியர்‌,புலி உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. அத்துடன் சுமார் 3 டன் எடையில் 25 அடி உயரம் கொண்ட இந்தியா கேட் போன்ற வடிவமைப்பைப் கண்டு சுற்றுலாபயணிகள் அதிசயித்தனர்.

பழக்கண்காட்சியில் பல்வேறு அரியவகை பழங்களும் இடம்பெற்றன.கண்காட்சியின் இடையே வெலிங்டன் ராணுவ வீரர்களின் பேண்ட் வாத்திய நிகழ்ச்சியும் நடைபெற்றது. கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்காட்சியை கண்டுகளித்தனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top