Home
You Are Here: Home » News » பெரம்பலூர் அருகே பெட்டிபெட்டியாக போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே பெட்டிபெட்டியாக போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே பெட்டிபெட்டியாக போலி மதுபான பாட்டில்கள் சாக்குமூட்டையில் இருந்ததை பொதுமக்கள் கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட எல்லைப்பகுதி கிரமாமான பெரகம்பி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் மாணவர்களும், இளைஞர்களும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஓரிடத்தில் மதுபான பாட்டில் பெட்டி பெட்டியாக வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

சாக்குமூட்டை ஒன்றிலும் மதுபான பாட்டில்கள் இருந்தன. இதுபற்றி பொதுமக்களுக்கு தெரியவந்தததும், உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மதுபான பெட்டிகளையும் சாக்குமூட்டையையும் கைப்பற்றினர். பின்னர் அவற்றை சோதனையிட்டபோது அவை சீல்வைக்கப்பட்ட போலி மதுபான பாட்டில்கள் என்பது தெரியவந்தது.

கடந்த சிலஆண்டுகளாக இப்குதியில் இதுபோன்ற போலி மதுபானங்கள் விற்பனையானதாகவும், அதை குடித்தவர்களில் 4பேர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top