Home
You Are Here: Home » News » காரைக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

காரைக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன .

காரைக்குடி அருகே பனம்பட்டியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிவகங்கை வனச்சரகர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதிவாணன் தலைமையிலான 10 பேர் கொண்ட வனச்சரகர் குழு அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையின்போது சுப்பையா என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது .

மேலும் இது தொடர்பாக சுப்பையா உள்ளிட்ட 4 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் செம்மரக்கட்டைகள் கடத்துவது அதிகரித்துள்ளது. இதுவரை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் செம்மரக்கட்டைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டேயிருப்பது குறிப்பிடத்தக்கது

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top