Home
You Are Here: Home » News » குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக்கண்காட்சி

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக்கண்காட்சி

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கோடை சீசனையொட்டி, பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது.

கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும், 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடைபெற்றது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் 56வது பழக்கண்காட்சி இன்று தொடங்குவதை முன்னிட்டு, அரங்குகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. பழக்கண்காட்சியில், நீலகிரி மாவட்டத்தில் விளையும் முக்கிய பழங்களான பிளம்ஸ், பீச், பேரி, ஸ்டா‌‌பெரி, ‌பெர்சிமென், துரியன் உள்ளிட்ட பலவகையான பழங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.

மேலும், சமவெளி பகுதியில் இருந்து மாம்பழம், கொய்யா, சப்போட்டா, திராட்சை, வாழை, பப்பாளி, தர்பூசணி, மாதுளை உள்ளிட்ட பழங்களும் கண்காட்சியில் இடம்பெற உள்ளது

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top