Home
You Are Here: Home » News » குடும்ப தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தை கொலை

குடும்ப தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தை கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தையை தண்ணீர் தோட்டியில் போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் கண்ணன் நகரை சேர்ந்த முத்துமாரி தனியார் செவிலியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இவரது கணவர் ஜெயகாந்திற்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயகாந்தன், தனது ஒன்றரை வயது குழந்தை குருபிரசாத்தை வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தோட்டியில் அமுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் தண்ணீர் தோட்டியில் குழந்தை இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துமாரி, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை கொன்று தப்பியோடிய ஜெயகாந்தனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top